மவுண்ட் மாங்குனியில் நடைபெறும் நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து ...

NZ vs ENG முதல் டெஸ்ட் | பிராட் கையில் ‘பேசிய’ பிங்க் பந்து... தோல்வியை நோக்கிச் செல்லும் நியூஸி. 

மவுண்ட் மாங்குனியில் நடைபெறும் நியூஸிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்ட முடிவில் நியூஸிலாந்து அணி தன் 2-வது இன்னிங்ஸில் 63 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. 394 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய நியூஸிலாந்து ஸ்டூவர்ட் பிராட் கையில் பேசிய பிங்க் பந்தின் அதீத இன்ஸ்விங்கர்களுக்கு ஸ்டம்புகளை இழந்தது. 2008-க்குப் பிறகு நியூஸிலாந்தில் டெஸ்ட் வெற்றியை நோக்கி இங்கிலாந்து பயணிக்கின்றது.

முன்னதாக 3-ம் நாளான இன்று 79/2 என்று தொடங்கிய இங்கிலாந்து அணி நியூஸிலாந்து அணியின் அசட்டுத்தனமான ஷார்ட் பிட்ச் பந்து வீச்சை புரட்டி எடுத்தது. ஆலி போப் (46 பந்தில் 49, 5 பவுண்டரி 3 சிக்ஸ்), ஜோ ரூட் (62 பந்தில் 57, 5 பவுண்டரி 1 சிக்ஸ்), ஹாரி பூரூக் (41 பந்துகளில் 54, 7 பவுண்டரிகள் 2 சிக்ஸ்) என்று நியூஸிலாந்து பவுலிங்கை மவுண்ட் மாங்குனியின் நாலாப்பக்கமும் சிதறடித்தனர். இவர்களோடு பென் ஃபோக்ஸ் 51, பென் ஸ்டோக்ஸ் அதிரடி 31, ஆலி ராபின்சன் 39 பங்களிப்பும் சேர இங்கிலாந்து தன் 2வது இன்னிங்ஸில் 5:06 என்ற ரன் ரேட்டில் 74 ஓவர்களில் 374 ரன்களைக் குவித்து நியூசிலாந்துக்கு கடினமான 394 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 comments: